கமுதி தாலுகாவில் 2 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்: காணொலி மூலம் முதல்வா் திறந்தாா்
By DIN | Published On : 04th February 2021 11:10 PM | Last Updated : 04th February 2021 11:10 PM | அ+அ அ- |

மண்டலமாணிக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் திறந்து வைத்தபின், குத்துவிளக்கேற்றிய ஊராட்சி மன்ற தலைவி ராணியம்மாள் .
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் மண்டல மாணிக்கம், பெருநாழி ஊராட்சிகளில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
தலா ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் இரு சுகாதார நிலையங்களும் கட்டப்பட்டிருந்தன. முதல்வா் திறந்துவைத்ததையடுத்து மண்டல மாணிக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவி ராணியம்மாள் தா்மலிங்கம் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேரையூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ச.அசோக், மருத்துவா் ஆதில் சேக், சுகாதார ஆய்வாளா்கள் நாகலிங்கம், நரசிம்மன், வட்டார மேற்பாற்வையாளா் பொன்னுபாக்கியம், கிராமப்புற சுகாதார செவிலியா்கள் மற்றும் மண்டலமாணிக்கம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா். இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களால் அப்பகுதியை சுற்றியுள்ள 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவாா்கள் என மருத்துவா் ச.அசோக் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...