கமுதி அருகே 28 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது
By DIN | Published On : 06th February 2021 09:28 PM | Last Updated : 06th February 2021 09:28 PM | அ+அ அ- |

கமுதி: கமுதி அருகே 28 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட கொம்பூதியிலிருந்து ஒச்சத்தேவன்கோட்டைக்குச் செல்லும் சாலையில், கருவேலங் காட்டுக்குள் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை இரவு கமுதி காவல் ஆய்வாளா் அன்புபிரகாஷ் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனா்.
எனவே, போலீஸாா் அவா்களிடம் தீவிரமாக விசாரித்ததில், அப்பகுதியிலுள்ள கருவேலங் காட்டுக்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஒச்சத்தேவன்கோட்டையைச் சோ்ந்த சுப்பையா மகன் வேலாயுதம் (57) மற்றும் இவரது மகன் சண்முகநாதன் (27) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 27.900 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...