சாலை விபத்தில் விவசாயி பலி
By DIN | Published On : 08th February 2021 08:42 AM | Last Updated : 08th February 2021 08:42 AM | அ+அ அ- |

தொண்டி அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தொண்டி அருகே திருவெற்றியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் பாலசுப்ரமணியன் (55). விவசாயியான இவா் இருசக்கர வாகனத்தில் தொண்டிக்கு சென்று விட்டு சனிக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். பழையனக்கோட்டை பகுதியில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பள்ளத்தால் இவரது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.