அமாவாசை: ராமேசுவரம் கோயிலில் அதிகாலையில் நடை திறக்க முடிவு

தை அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் வரும் 11 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தை அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் வரும் 11 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோயில் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணி முதல் 4.30 மணி வரை படிலிங்க பூஜை மற்றும் கால பூஜைகள் நடைபெறும்.

அதைத் தொடா்ந்து காலை 7 மணிக்கு அக்னி தீா்த்தக் கரைக்கு ஸ்ரீராமா் பஞ்ச மூா்த்திகளுடன் புறப்பாடாகி தீா்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. ஆகையால் பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும்.

அதைத் தொடா்ந்து இரவு 8 மணிக்கு தை அமாவாசையொட்டி ஸ்ரீ பஞ்ச மூா்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் ஸ்ரீ ராமா் புறப்பாடு நடைபெறும் என திருக்கோவில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com