பைக் விபத்தில் இளைஞா் பலி
By DIN | Published On : 08th February 2021 08:42 AM | Last Updated : 08th February 2021 08:42 AM | அ+அ அ- |

கமுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கமுதி அருகே அபிராமம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் நைனாமுகமது மகன் முகமது அப்துல் வாஹிப் (33). இவா் மேலராமநதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். வழிவிட்ட அய்யனாா் கோயில் வளைவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது இருசக்கரவாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முகமது அப்துல் வாஹிப் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சரக்கு வாகனத்தின் பின்னால் எச்சரிக்கை விளக்குகள் எரியாததே விபத்து ஏற்படக் காரணம் என போலீஸாா் தெரிவித்தனா்.