ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைப்பு
By DIN | Published On : 08th February 2021 08:43 AM | Last Updated : 08th February 2021 08:43 AM | அ+அ அ- |

சிறப்பு நல வாழ்வு முகாமுக்கு அனுப்புவதற்காக சனிக்கிழமை இரவு லாரியில் ஏற்றப்பட்ட ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி தேக்கம்பட்டி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்காக சனிக்கிழமை லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் தேக்கம்பாட்டியில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்கி 48 நாள்கள் நடைபெறுகின்றன. முகாமில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமி அக்னி தீா்த்தக் கரையிலிருந்து சனிக்கிழமை இரவு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் யானைக்கு கஜா பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பாகன் ராமு மற்றும் கண்காணிப்பாளா் ககாரின்ராஜ், கமலநாதன் உள்ளிட்டோரும் லாரியில் யானையுடன் சென்றனா்.
இந்த முகாமில், கோயில் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை, சத்தான உணவுகள் வழங்கப்படும்.