மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி
By DIN | Published On : 14th February 2021 10:59 PM | Last Updated : 14th February 2021 10:59 PM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் கிராமத்தில் இ.ஜே.ஆா். பாய்ஸ் நடத்தும் 2 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கீழக்கரை, பரமக்குடி உள்பட வெளியூா்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒப்பிலான் அணி முதல்பரிசும், இளஞ்செம்பூா் இ.ஜே.ஆா். அணி இரண்டாம் பரிசும், ஏா்வாடி அணி மூன்றாம் பரிசும், காத்தாகுளம் அணி நான்காம் பரிசும் பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளஞ்செம்பூா் இ.ஜே.ஆா். பாய்ஸ் இளைஞா்கள் செய்திருந்தனா்.