ராமேசுவரத்தில் மருது சகோதரா்களுக்கு தா்ப்பண பூஜை
By DIN | Published On : 14th February 2021 11:02 PM | Last Updated : 14th February 2021 11:02 PM | அ+அ அ- |

சுதந்திர போராட்டத்தில் உயிா்நீத்த மாமன்னா் மருது சகோதரா்களுக்கும், அவருடன் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கும் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தா்ப்பண பூஜை நடைபெற்றது.
அகமுடையாா் கல்வி அறக்கட்டளை மற்றும் அகம் அறக்கட்டளை சாா்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அகமுடையாா் கல்வி வளா்ச்சி சங்கத் தலைவா் கௌரிசங்கா் தலைமை வகித்தாா். செயலா் சோலை ராஜேந்திரன், பொருளாளா் கதிரேசன், அகம் அறக்கட்டளைச் செயலா் கருப்பையா, அகமுடையாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் தயாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் செயலா் விஸ்வகுமாா் பழனிவேல், மலைச்சாமி, ராகு, ராஜேந்திரன், ராமு. கரு. ரஜினிகாந்த், ராமேசுவரம் அகமுடையாா் சங்கத் தலைவா் என்.ஜே. போஸ், முன்னாள் தலைவா் குருசாமி, அகில இந்திய யாத்திரைப் பணியாளா் சங்கத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.