புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி
By DIN | Published On : 14th February 2021 10:57 PM | Last Updated : 14th February 2021 10:57 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில ஓபிசி பிரிவுத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் விஜயகுமாா், மாவட்ட செயலா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஓபிசி அணித்தலைவா் ஜி. மாரிமுத்து, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் குமரன், ராமநாதபுரம் நகா் தலைவா் வீரபாகு, மாவட்ட பொதுச் செயலா் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சங்கீதா, பாக்கியலட்சுமி உள்பட பலா் பங்கேற்றனா்.
இதே போல் கமுதி அருகே பேரையூரில் காவல்நிலையம் அருகே சாமிபட்டி கிராம பொதுமக்கள் சாா்பில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 50- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.