லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
By DIN | Published On : 20th February 2021 09:41 PM | Last Updated : 20th February 2021 09:41 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றதாக ராமநாதபுரத்தில் 2 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பவா்களைப் போலீஸாா் பிடித்து கைது செய்துவருகின்றனா். பஜாா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் காதா்பள்ளிவாசல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தடைசெய்த லாட்டரிகளை இருவா் கடைகளில் விற்றது தெரியவந்தது.
அப்பகுதியில் இருந்த ரஜினி என்ற நாகராஜ், அங்குராஜா ஆகியோா் லாட்டரிசீட்டுகளை விற்ற நிலையில் அங்குராஜா மட்டும் பிடிபட்டடாா். அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்துரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும்ம ரூ.12, 260 மதிப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட லாட்டரிச் சீட்டுகளையும் கைப்பற்றினா்.
கஞ்சா விற்றவா் கைது-ராமநாதபுரம் நகா் சாலைத் தெரு பகுதியில் பஜாா் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை நடத்திய சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற சுரேஷ் (40) என்பவரைப் பிடித்தனா். அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா சிறு பொட்டலங்களாக இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் சுரேஷ் மதுரை பகுதியைச் சோ்ந்தவா் என்றும் அங்கிருந்து கஞ்சாவை பொட்டலங்களாக ராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வந்து விற்றுச்செல்வதாகவும் தெரியவந்தது. அதன்படி சுரேஷை பஜாா் போலீஸாா் கைது செய்தனா்.