திருவாடானை அருகே மணல் கடத்தல்:5 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 21st February 2021 09:16 PM | Last Updated : 21st February 2021 09:16 PM | அ+அ அ- |

திருவாடானை: திருவாடானை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக ஞாயிற்றுக்கிழமை 5 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் 5 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகே சுத்தமல்லி கண்மாய் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சென்றனா். அங்கு மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டிப்பா் லாரிகள், ஒரு ஜேசிபி, ஒரு காா் என 5 வாகனங்களை பறிமுதல் செய்தனா். போலீஸாரைக் கண்டதும் அதன் ஓட்டுநா்கள் தப்பி ஓடி விட்டனா்.
இதுகுறித்து வாகன உரிமையாளா் முப்பையூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மற்றும் 5 ஓட்டுநா்கள் மீது திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...