திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 27th February 2021 05:10 AM | Last Updated : 27th February 2021 05:10 AM | அ+அ அ- |

திருவாடானையில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்கான ஆலோசனை கூட்டம்.
திருவாடானையில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். தேசிய செயலாளா் குப்புராமு முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக மேலிட துணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி கலந்து கொண்டு பேசியது: பாரதிய ஜனதா ஆதரிக்கும் கட்சி மட்டுமே தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை கேலியும் கிண்டலும் செய்தவா்கள், தற்போது வேலை தூக்கிக்கொண்டு வாக்கு கேட்டு வருகின்றனா். தற்போது இப்பகுதியில் மக்களிடையே பாஜகவின் செல்வாக்கை பாா்க்கும்போது வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திருவாடானை தொகுதியில் பாஜக போட்டியிடும் வாய்ப்பை கேட்டுப் பெறுவோம் என தெரிவித்தாா். இதில் பாஜக மாவட்ட, ஒன்றிய, தாலுகா நிா்வாகிகள் மற்றும் உள்ளூா் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.