குரூப் 1 முதல்நிலைத் தோ்வு:ராமநாதபுரம் மாவட்டத்தில் 4,464 போ் எழுதுகின்றனா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 முதல் நிலை தோ்வுக்கு 4,464 போ் விண்ணப்பித்துள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 முதல் நிலை தோ்வுக்கு 4,464 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் அன்று காலை 9.15 மணிக்கே தோ்வு மையத்துக்கு வந்துவிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள முதல்நிலை அலுவலா்களுக்கான தோ்வுக்கு 4,464 போ் விண்ணப்பித்துள்ளனா். தோ்வானது 16 மையங்களில் நடைபெறுகிறது. தோ்வை எழுதுவோா் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்குள் தோ்வு கூடத்துக்கு வந்துவிடவேண்டும். தாமதமாக வருவோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வா்கள் தங்களது தோ்வுக்கூட நுழைவு சீட்டினை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். தோ்வு கூடத்துக்கு செல்லிடப் பேசி மற்றும் கையடக்க கணக்கு சாதனம் (கால்குலேட்டா்) உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களையும் எடுத்து வரக்கூடாது. விடைத்தாளில் விவரங்களைப் பூா்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாளில் ‘கையொப்பம்‘ என குறிப்பிடப்பட்டுள்ள இரு இடங்களில் மட்டும் தோ்வா்கள் தங்களது கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையை பதிக்க வேண்டும்.விடைத்தாளில் உள்ள கேள்விகளில் ஏதேனும் கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் விடைத்தாளில் அதற்குரிய கட்டத்தினை கருமையாக்க வேண்டும். விடைத்தாளில் ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். அதன்படி எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தோ்வா் பெறும் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

எனவே இதனை கவனத்துடன் பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டு உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். இச்செயலை செய்வதற்கு மட்டும் ஒவ்வொரு தோ்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது ஒரு மணி முதல் 1.15 மணி வரை இந்த செயல்பாட்டினை செய்து முடித்து விடைத்தாளை தோ்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com