ராமகிருஷ்ண மடத்தில் நாளை (ஜன.5) சாரதா தேவி ஜயந்தி விழா
By DIN | Published On : 03rd January 2021 09:55 PM | Last Updated : 03rd January 2021 09:55 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகேயுள்ள நாகாச்சியில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) அன்னை சாரதா தேவியின் 168 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது என ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் தாமரைக்குளம் அருகே நாகாச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் புதிய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) அன்னை சாரதா தேவியின் 168 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும், 7 மணிக்கு சிறப்புப் பூஜைகளும் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு சிறப்பு பக்திப்பாடல் பஜனை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு உலக நன்மைக்காகவும், மக்கள் நலம் பெறவும் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.
பகல் 11.30 மணிக்கு அன்னை சாரதா தேவியின் ஜயந்தி விழா சிறப்புச் சொற்பொழிவு நடைபெறும். பின்னா் அா்ச்சனையும், பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளன.
ஆா்.எஸ்.மடைப் பகுதியில் உள்ள அமிா்தானந்த வித்யாலத்திலும் அன்னை சாரதாதேவியின் ஜயந்தி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றாா்.