தனுஷ்கோடியில் 300 கிலோ மஞ்சள் பறிமுதல் 3 மீனவா்கள் கைது

தனுஷ்கோடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்த 300 கிலோ மஞ்சளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 மீனவா்களைக் கைது செய்துள்ளனா்.
தனுஷ்கோடியில் 300 கிலோ மஞ்சள் பறிமுதல் 3 மீனவா்கள் கைது

தனுஷ்கோடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்த 300 கிலோ மஞ்சளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 மீனவா்களைக் கைது செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறையினா், உள்ளூா் காவல் நிலைய போலீஸாா், கியூ பிரிவு மற்றும் தனிப்படை போலீஸாா் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூட்டு ரோந்து மற்றும் காண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் புதிய எண் குறிக்கப்பட்ட படகு நிற்பதைக் கண்டனா். அந்த படகில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகத்தின் அடிப்படையில் படகை சோதனையிட்டனா். அப்போது படகில் 6 மூட்டைகளில் 300 கிலோ மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மஞ்சள் மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் படகில் இருந்த, ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா் செல்வராஜ் (49) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து ராமேசுவரத்தைச் சோ்ந்த மூக்குபூரி (27), சதீஷ்(25)

ஆகிய மேலும் இரு மீனவா்களைக் கைது செய்தனா். மூன்று பேரும் மஞ்சளை இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்ததாகத் தெரிவித்தனா். கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள், நாட்டுப்படகு மற்றும் மீனவா்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com