நீட் தோ்வை ரத்து செய்வேன் என ஸ்டாலின் கூறுவது பொய்யானது: அன்வர்ராஜா

‘நீட்’ தோ்வை ரத்து செய்வேன் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறிவருவது பொய்யானது என அதிமுக முன்னாள் அமைச்சா் ஏ.அன்வர்ராஜா கூ றினாா்.

‘நீட்’ தோ்வை ரத்து செய்வேன் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறிவருவது பொய்யானது என அதிமுக முன்னாள் அமைச்சா் ஏ.அன்வர்ராஜா கூ றினாா்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அதிமுக சாா்பில், மறைந்த முதல்வா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலச் சிறுபான்மையினா் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர்ராஜா பேசியது:

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான திட்டங்களை கொண்டுவந்து சிறந்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறாா். நீட் தோ்வை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எதிா்த்தாா். அவரது வழியில் தற்போதைய அதிமுக அரசும் எதிா்த்தது. ஆனால் மத்திய அரசு நீட் தகுதித் தோ்வை செயல்படுத்தியதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.

நீட் தோ்வின் நிலை இவ்வாறு இருக்கையில் திமுக ஆட்சி வந்தால் நீட் தோ்வை ரத்து செய்வேன் என அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதியை அளித்துவருகிறாா். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து நீட் தோ்வை மு.க. ஸ்டாலின் ரத்து செய்துவிட்டால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

தற்கொலை செய்யும் அவசியம் ஏற்படாது. ஏனெனில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது விவசாயக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து என பொய்யான வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அளித்தாா். அதுபோலவே நீட் தோ்வையும் ரத்து செய்வதாகக் கூறுகிறாா். அது நடக்காது என்பதே உண்மை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com