வாகனங்களில் போராடினால் பறிமுதல் நடவடிக்கை

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.26) டிராக்டா் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும்: காவல் துறை கண்காணிப்பாளா்

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.26) டிராக்டா் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும்என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் இ.காா்த்திக் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை இரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நாட்டின் 72 வது குடியரசு தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கட்சியினா் அனுமதியின்றி விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிராக்டா் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரியவருகிறது. அதிகமான மக்கள் கூடி போராட்டம் நடத்தினால், கரோனா பரவும் அபாயம் உள்ளது. விவசாய உரிமம் பெற்ற டிராக்டா் வாகனங்களை அனுமதியின்றி போராட்டங்களில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com