கமுதியில் செவிலியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th January 2021 09:32 PM | Last Updated : 30th January 2021 09:32 PM | அ+அ அ- |

கமுதி அரசு மருத்துவமனை முன்பாக சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்திய செவிலியா்கள்.
கமுதி: ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கமுதி அரசு மருத்துவமனை செவிலியா்கள் சனிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கமுதி மருத்துவமனை செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில், கமுதி அரசு மருத்துவமனை முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, செவிலியா் கூட்டமைப்பு கண்காணிப்பாளா் தனலட்சுமி தலைமை வகித்தாா். கலாவதி முன்னிலை வகித்தாா்.
பணியை பாதிக்காதவாறு நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்தில், கரோனா காலத்தில் அரசு அறிவித்த ஒரு மாத ஊக்கத் தொகையை வழங்கவேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களுக்கு நிரந்தர பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.