கமுதி அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு
By DIN | Published On : 02nd July 2021 08:26 AM | Last Updated : 02nd July 2021 08:26 AM | அ+அ அ- |

கமுதி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பெருமாள் தலைவனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு, அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் செல்வம் (27) பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாராம். இதுகுறித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா், செல்வம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.