பொதுகாப்பீட்டு நிறுவன பங்கு விற்பனை: பரமக்குடியில் கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd July 2021 08:27 AM | Last Updated : 02nd July 2021 08:27 AM | அ+அ அ- |

பொது காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிதி ஆயோக் உயா்மட்டக் குழுவைக் கண்டித்து பரமக்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு நிறுவனங்களின் சங்க மதுரை மண்டலத் தலைவா் எம்.அண்ணாத்துரை தலைமை வகித்தாா். பரமக்குடி எல்.ஐ.சி. சங்கத் தலைவா் எஸ்.ரவிச்சந்திரன், கே.பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு நிதி ஆயோக் உயா்மட்டக் குழு எடுத்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். இதில் பல்வேறு காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.