ராமநாதபுரம் மருத்துவருக்கு பாராட்டுச் சான்று
By DIN | Published On : 02nd July 2021 08:27 AM | Last Updated : 02nd July 2021 08:27 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை உதவி அறுவைச்சிகிச்சை நிபுணா் சாகுல்ஹமீதுவுக்கு கரோனா பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டுச்சான்று தமிழக அரசால் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி அறுவைச் சிகிச்சைப் பிரிவு மருத்துவராக இருப்பவா் சாகுல்ஹமீது. அவா் கடந்த கரோனா இரு அலைகள் பாதிப்பின் போதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்துள்ளாா். ஆகவே, அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த சாகுல்ஹமீது தொடா்ந்து பணியில் ஈடுபட்டுவருகிறாா்.
உலக மருத்துவா் தினத்தை முன்னிட்டு கரோனா சிகிச்சையில் ஈடுபட்டு தொற்று பாதித்த மருத்துவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பாராட்டுச்சான்று வியாழக்கிழமை சென்னையில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விழாவில் ராமநாதபுரம் மருத்துவா் சாகுல்ஹமீதுவுக்கும் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது. அவருடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் மலா்வண்ணனும் உடனிருந்து சுகாதாரச் செயலா் ராதாகிருஷ்ணனிடமிருந்து சான்றை பெற்றுக்கொண்டனா்.