மண்வளம் அறிய விவசாயிகளுக்கு மண்வள அட்டை முகாம்

கமுதி வட்டார விவசாயிகளுக்கு மண்வளம் அறிய ஞாயிற்றுக்கிழமை மண்வள அட்டை முகாம் நடைபெற்றது.
கமுதி அருகே ஆனையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண் வள அட்டை முகாமில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரி.
கமுதி அருகே ஆனையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண் வள அட்டை முகாமில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரி.

கமுதி வட்டார விவசாயிகளுக்கு மண்வளம் அறிய ஞாயிற்றுக்கிழமை மண்வள அட்டை முகாம் நடைபெற்றது.

கமுதி வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும் மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் நடப்பாண்டில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான மண்மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைடிப்படையில் ஆனையூா் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கொ்சோன்தங்கராஜ் தலைமை வகித்தாா். துணை வேளாண்மை அலுவலா் பா.சேதுராம் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட துணை வேளாண்மை இயக்குநா் பாஸ்கரமணியன் (மத்திய திட்டம்) கலந்து கொண்டு பேசினாா். முகாமில் ஆனையூா் ஊராட்சித் தலைவா் காவடிமுருகன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இம்மிகாமில் உதவி வேளாண்மை அலுவலா் இந்துமதி, அட்மா திட்ட வட்டார மேலாளா் முனியசாமி, திட்ட உதவியாளா்கள் சுபாஷ்சந்திரபோஸ், மணிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com