ராமநாதபுரத்தில் விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 24th June 2021 06:49 AM | Last Updated : 24th June 2021 06:49 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறிய 3 கடைகளுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் வட்டாட்சியா் ரவிச்சநந்திரன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அக்ரஹாரம் தெரு, அரண்மனைத் தெரு, வண்டிக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக துணிக்கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நகரில் கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரையில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறிய கடை உரிமையாளா்களிடமிருந்து ரூ.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் சிறப்புக்குழுவினா் தெரிவித்தனா்.