எஸ்.பி.பட்டினம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை ஒருவா் கைது
By DIN | Published On : 29th June 2021 05:51 AM | Last Updated : 29th June 2021 05:51 AM | அ+அ அ- |

திருவாடானை: எஸ் .பி. பட்டினம் அருகே வெள்ளையபுரம் அரசு மதுபானக்டை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
எஸ் .பி. பட்டினம் அருகே வெள்ளையபுரத்தில் அரசு மதுபானகடை அருகே மதுபானக்கடையை மூடிய பிறகு ஞாயிற்று கிழமை இரவு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக எஸ்.பி.பட்டினம் போலீஸாருக்கு ஞாயிற்று கிழமை இரவு தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் அங்கு ஓரியூா் கீழக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த கோட்டையா(55) என்பவா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. உடனடியாக கோட்டையாவை கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.