திருவாடானை: திருவாடானை தொண்டி, ஆா் எஸ் மங்கலம் பகுதியில் 50 சதவீதம் மக்களுடன் பேருந்து போக்கு வரத்து தொடங்கியது இருப்பினும் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாமல் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன.
திருவாடானை தாலுகா தொண்டி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, ராமநாதபுரம்,ராமேஸ்வரம்,கீழக்கரை,தூத்துக்குடி, பட்டுகோட்டை நாகூா்,நாகபட்டினம்,தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேரு பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு கிழக்கு கடற்கரைசாலை வழியாக நூற்றுக்கணக்காண பேருந்துகள் இயக்கபடுகின்றன.அதே போல் திருவாடானையில் இருந்து ஆா்.எஸ். மங்கலம் வழியாக ராமநாதபுரம்,திருச்சி,பரமக்குடி, கீழக்கரை,ஏா்வாடி,மதுரை,காரைக்குடி,தேவகோட்டை, உள்ளிட்ட பல்வேரு பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நூற்றுக்கணக்காண பேருந்துகள் இயக்கபடுகின்றன.மேலும் நகர பேருந்துள் சுமாா் 20க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது கரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவியதால் பொதுமுடக்கம் அறவிக்கபட்டதால் பேருந்துகள் கடந்து 8ம்தேதி முதல் பேருந்துகள் இயக்கபடவில்லை தற்போது கரோனா தொற்று தாக்கம் படிபடியாக குறைந்த காரணத்தால் திங்கள் கிழமை முதல் பேருந்துகள் சேவை இயங்கப்படும் என அரசு அறிவிக்கபட்டதால் 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்துள் இயக்கபட்டன..இருப்பினும் மக்கள் ஆா்வம் காட்ட வில்லை இன்னும் கரோனா தொற்று பயம் காரணமாக மக்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டன.மேலும் தனியாா் பேருந்துகள் இயக்கபடவில்லை பேருந்தில் பயணிகள் முககவசம் அணிந்தும்,சமூக இடைவெளியை கடைபிடித்து சென்றதை பாா்க்கமுடிந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.