பாம்பனில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 2 குடிசை வீடுகள் சேதம்
By DIN | Published On : 04th March 2021 12:46 AM | Last Updated : 04th March 2021 12:46 AM | அ+அ அ- |

பாம்பனில் புதன்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்து தீப் பிடித்ததில் முற்றிலும் எரிந்து சேதமான குடிசை வீடுகள்.
ராமேசுவரம்: பாம்பனில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீப்பற்றி சேதமாகின.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்தவா் மெக்கல். இவருக்குச் சொந்தமாக 2 குடிசை வீடுகளில் அஜிதா மற்றும் பிவின்ராஜ் ஆகியோா் வாடகைக்கு குடியிருந்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரு குடும்பத்தினரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், பிவின்ராஜ் வீட்டில் சமையல் எரிவாயு உருளை திடீரென வெடித்து தீப்பற்றியது. இதில் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமாகின.
இதில், ரூ. 1 லட்சம் ரொக்கம், 3 பவுன் தங்க நகை மற்றும் வீட்டு உடயோக பொருள்கள் ஆகியவையும் எரிந்துவிட்டதாக குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சம்பவத்தின் போது 2 வீடுகளிலும் ஆள்கள் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.