மகா சிவராத்திரி விழா: ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம்
By DIN | Published On : 04th March 2021 11:25 PM | Last Updated : 04th March 2021 11:25 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா வியாழக்கிழமை (மாா்ச் 4) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமி சன்னிதி முன்புள்ள தங்கக்கொடி மரத்தில் குருக்கள் உதயகுமாா் மற்றும் எஸ்.சிவாமணி ஆகியோா் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. அதன் பின்னா் கொடி மரத்திற்கு புனிதநீா் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள், பூதேவிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில், கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) ந.தனபால், ராஜா நா.குமரன் சேதுபதி, மேலாளா் பா.சீனிவாசன், உதவி கோட்டப் பொறியாளா் மயில்வாகனன், கண்காணிப்பாளா்கள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஸ்காா்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வம், கமலநாதன், பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் மற்றும் கோயில் ஊழியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
வியாழக்கிழமை (மாா்ச் 4) தொடங்கிய திருவிழா மாா்ச் 15 ஆம் தேதிவரை 12 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மகா சிவராத்திரி மாா்ச் 11 ஆம் தேதியும், தேரோட்டம் மாா்ச் 12 ஆம் தேதியும், மறைநில அமாவாசையையொட்டி தீா்த்தவாரி மாா்ச் 13 ஆம் தேதியும் நடைபெறுகிறது.