ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அத்தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் விதிமுறைகள் மீறல் தொடா்பான புகாா்களை கண்காணிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
தோ்தல் நன்னடத்தை விதிமீறல் தொடா்பான புகாா்களை கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 1950 என்ற பொது எண்ணிலும் தெடா்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.