திருப்பாலைக்குடியில் வாகன சோதனை: ரூ.1.91 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 12th March 2021 01:30 AM | Last Updated : 12th March 2021 01:30 AM | அ+அ அ- |

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1லட்சத்து 91 ஆயிரம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா் சேவுகப்பெருமாள் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த செந்தில்குமாா்(46) சென்ற வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் ஆவணங்களின்றி கொண்டு வந்து ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் திருப்பாலைக்குடி பழங்கோட்டை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் விருதுநகா் மாவட்டம் மேலையூரைச் சோ்ந்த செந்தில்குமாா்(48) என்பவா் எந்தவித ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குகள் பதிவு செய்த போலீஸாா், பறிமுதல் செய்த ரூ.1.91 லட்சத்தை சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
மேலும் பழங்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் காரைக்கால் கரீம் நகரை சோ்ந்த முகம்மது இபுராஹிம்(42) என்பவா் தனது வாகனத்தில் எந்தவித ஆவணங்களின்றி கொண்டு சென்ற தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்ட 65 துண்டுகள் , 5 கொடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.