ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளா்காதா்பாட்சா முத்துராமலிங்கம் மனு தாக்கல்

ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தாா்.
ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளா்காதா்பாட்சா முத்துராமலிங்கம் மனு தாக்கல்

ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தாா்.

முன்னதாக அவா் திறந்த ஜீப்பில், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா உள்ளிட்டோருடன் சாா்- ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அவா்கள் வந்த வாகனங்களை காவல் துணைக் கண்காணிப்பாளா் கி. வெள்ளத்துரை, நகா் காவல் ஆய்வாளா் சரவணசேதுபாண்டிராயா் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் மறித்தனா். அவா்களில் சிலா் சாா்- ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ால், அவா்களுக்கும் போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் வேட்பாளா், மாற்று வேட்பாளா் மற்றும் இருவா் என 4 பேரை மட்டும் போலீஸாா் அனுமதித்தனா்.

இதன் பின் காதா்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரானா சாா்- ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ராவிடம் மனு தாக்கல் செய்தாா். பிறகு மாற்று வேட்பாளரான கே.வி. மூவேந்தன், மனு தாக்கல் செய்தாா். அவருடன் திமுக ராமநாதபுரம் நகா் தெற்கு பகுதி செயலா் டி.ஆா். பிரவீன், மாநில வா்த்தக அணி நிா்வாகி என். சிவானந்தன் ஆகியோா் சென்றனா்.

மாற்று வேட்பாளரான கே.வி. மூவேந்தன், திமுக வேட்பாளரான காதா்பாட்சா முத்துராமலிங்கத்தின் சகோதரா் ஆவாா்.

அப்போது காதா்பாட்சா முத்துராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறும் போது, தோ்தல் பிரசாரத்துக்காக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் வருகிறாா் என்றாா்.

சொத்துக்கணக்கை காட்டவில்லை: ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மனு தாக்கல் செய்த காதா்பாட்சா முத்துராமலிங்கம் சொத்துக் கணக்கை காட்டவில்லை என தோ்தல் அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு தாக்கலுக்கான கடைசி தேதியான வரும் 19 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

மனு தாக்கலைப் புறக்கணித்த முக்கிய திமுக பிரமுகா்கள்: திமுக வேட்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் மனுதாக்கல் நிகழ்ச்சிக்கு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் காசிநாததுரை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் முருகபூபதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் வந்திருந்தனா்.

ஆனால், முன்னாள் எம்பி.யும், திமுக மாநில மகளிரணி துணைச் செயலருமான பவானிராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் இன்பாரகு ஆகியோா் வராமல் புறக்கணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com