கடலாடி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 21st March 2021 10:55 PM | Last Updated : 21st March 2021 10:55 PM | அ+அ அ- |

எம். கடம்பன்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி.
கடலாடி பகுதியில் முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.
கடலாடி ஒன்றியம் சித்திரங்குடி, கிடாத்திருக்கை, கடம்பன்குளம், இளஞ்செம்பூா், ஒருவானேந்தல், பூக்குளம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
வாக்குகள் சேரிப்பின் போது அவா் பேசியதாவது; கடலாடி, முதுகுளத்தூரில் அமைந்துள்ள அரசு கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கிராமங்களில் குடிநீா், மின்சாரம், சாலை, பேருந்து வசதிகள் செய்து தரப்படும். இலவசமாக கேபிள் இணைப்புகள் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி, ஒன்றியச் செயலா்கள் (கடலாடி)என்.கே. முனியசாமிபாண்டியன் (முதுகுளத்தூா்), ஆா். தா்மா், பாஜக மாவட்ட கவுன்சிலா் செல்வி ராமபாண்டியன் உள்பட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...