ராமநாதபுரத்தில் 3 போ், சிவகங்கையில் 9 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th March 2021 09:33 AM | Last Updated : 25th March 2021 09:33 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கும் கரானொ தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் சுமாா் 500 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அவா்களில் ஓரிருவா் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தற்போது கரோனா இரண்டாவது அலை உலகெங்கும் பரவுவதாக கூறப்படும் நிலையில் ராமநாதபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் 350 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ராமநாதபுரத்தில்16 போ் கரோனா சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவா்களில் ஒருவா் குணமடைந்து புதன்கிழமை மாலை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,036 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,045 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.