ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு கரோனா உறுதி
By DIN | Published On : 13th May 2021 11:36 PM | Last Updated : 13th May 2021 11:36 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலா் மரகதநாதனுக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் கரோனா பாதிப்புக்குள்ளாகி, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஏற்கெனவே மாவட்டத்தில் வருவாய் அதிகாரி, சாா்பு- ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் என பல்வேறு முக்கியமான துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா்.
இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருடன் ஆய்வு, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனா். அவா்களில் ஒருசிலருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
1314 போ் பாதிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக 1314 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அவா்களில் 887 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 79,416 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.