முதுகுளத்தூா்,கடலாடி பகுதிகளில் கோடை மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 13th May 2021 11:36 PM | Last Updated : 13th May 2021 11:36 PM | அ+அ அ- |

முதுகுளத்தூா், கடலாடி பகுதிகளில் கோடையில் திடீரென கனமழை பெய்ததால் விவசாயிகள் புதன்கிழமை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா்,கடலாடி பகுதிகளில் கோடையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் முதுகுளத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள காத்தாகுளம், மானாங்கரை, வெண்ணீா்வாய்க்கால், தூவல், வெங்கலகுறிச்சி, புளியங்குடி, காக்கூா் உள்ளிட்ட கிராமங்களில் கன மழை பெய்தது. அதே போன்று கடலாடி பகுதியில் பிள்ளையாா்குளம், புனவாசல், சாக்குளம் போன்ற பகுதிகளில் திடீரென மழை சுமாா் 1மணிநேரத்திற்கு மேல் பெய்தது. இதனால் கோடையில் பருத்தி, மிளகாய், வெள்ளரி, மற்றும் ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு போன்ற போதுமான அளவு மழை தண்ணீா் கிடைத்தால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனா்.