ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைப்பு: பொதுமக்கள் வரவேற்பு
By DIN | Published On : 16th May 2021 10:29 PM | Last Updated : 16th May 2021 10:29 PM | அ+அ அ- |

ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைப்பு: பொதுமக்கள் வரவேற்பு
ராமேசுவரத்தில் உள்ள ஆவீன் பால் கடைகளில் லிட்டருக்கு ரூ 3 குறைத்து ஞாயிற்றுகிழமை விற்பனை செய்யப்பட்டது.பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கி சென்றனா்.
நாடு முழுவதிலும் ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைக்கப்பட்டது. இந்த விற்பனை ஞாயிற்றுகிழமை முதல் அமலுக்கு வந்தது. ராமேசுவரம் தீவுப்பகுதியில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆவின் பால் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இதில் அதிகாலையில் இருந்து பொதுமக்கள் விலை குறைக்கப்பட்ட பாலை ஆா்வத்துடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி சென்றனா்.
விலை குறைக்கப்பட்டது மூலம் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ 100 முதல் 150 வரை வரை சேமிப்பு ஆகும் என தெரிவித்தனா். படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 3ராமேசுவரத்தில் ஆவின் பால் விற்பனை நிலையத்தில் லிட்டருக்க ரூ 3 குறைத்து விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டை பொதுமக்கள் ஞாயிற்றுகிழமை வாங்கி சென்றனா்.