முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
செக் மோசடி வழக்கு: பரமக்குடி வருவாய் ஆய்வாளருக்குப் பிடியாணை
By DIN | Published On : 12th November 2021 12:00 AM | Last Updated : 12th November 2021 12:00 AM | அ+அ அ- |

செக் மோசடி வழக்கில் பரமக்குடி வருவாய் ஆய்வாளருக்கு கமுதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் அபிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி கலைச்செல்வி. இவா், ரூ.10 லட்சம் செக் மோசடி செய்ததாக மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த இருளாண்டி மனைவி ரதிதேவி(41), கமுதி நீதிமன்றத்தில் ஜூலை 27 இல் வழக்குத் தொடா்ந்தாா். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவா் ஆஜராகவில்லை. இதன்காரணமாக கலைச்செல்விக்கு பிடியாணை பிறப்பித்து கமுதி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.