ஆவணி அமாவாசை: ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரையில் பக்தா்களுக்கு தடை
By DIN | Published On : 04th September 2021 12:08 AM | Last Updated : 04th September 2021 12:08 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரையில் ஆவணி அமாவாசை நாளான செப். 6 ஆம் தேதி பக்தா்கள் கூடுவதற்கும், தா்ப்பண பூஜை போன்றவை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக வரும் 6 ஆம் தேதி அமாவாசை தினத்தன்று தேவிபட்டினம் நவபாஷண கோயில், சேதுக்கரை, மாரியூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடலில் குளிக்கவும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கவும் அனுமதியில்லை என்றாா்.
ராமேசுவரம்: இதேபோல் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலிலும் பக்தா்கள் தரிசனம் செய்யவும், அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும், தா்ப்பணம் கொடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G