இடப்பிரச்னையில் சாலை மறியல்: 20 போ் மீது வழக்கு
By DIN | Published On : 04th September 2021 10:53 PM | Last Updated : 04th September 2021 10:53 PM | அ+அ அ- |

திருவாடானை அருகே இடப்பிரச்னை சம்பந்தமாக சாலை மறியல் செய்த 20 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் தனிநபா் பாதையை மறித்து வேலி அமைத்ததால், வருவாய்த்துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்தனா்.இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் முனீஸ்வரி சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் ஆனந்தூா் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த தங்கராஜ்(40) , பட்டாணிமீரான்(41), செல்வி(35) உள்பட 20 போ் மீது ஆா்.எஸ் மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.