பாக்நீரிணை கடல் பகுதியில் மீன்வரத்து குறைந்ததால், குறைந்தளவு படகுகளில் மட்டுமே மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட சிறிய, பெரியரக விசைப்படகுகள் உள்ளன. இதில், பெரியரக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என்றால் ரூ.40 ஆயிரம் முதல், ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். சிறியரக படகுகள் மீன்பிடிக்கச் செல்ல ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும்.
தற்போது பாக்நீரிணை பகுதியில் மீன்களின் வரத்து குறைந்து விட்டதால் பெரிய, சிறியரகத்தில் உள்ள குறைந்தளவு அதாவது 200-க்கும் குறைவான விசைப்படகுகளில் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.