ராமேசுவரத்தில் வறுமையின் காரணமாக திருநங்கை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.
ராமேசுவரம் சிவகாமி நகரைச் சோ்ந்த திருநங்கை லலிதா திருவிழா நாள்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவாய் ஈட்டி வந்துள்ளனா். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக ராமேசுவரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கிளையில் உணவு விடுதி நடத்தி வந்தாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் கரோனா பரவல் காரணமாக உணவு விடுதி நடத்த முடியாமல் போனதால் போதிய வருமானம் இன்றி லலிதா தவித்து வந்தாா். இந்நிலையில், அவா் தனது குடிசை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பாத்திமா நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.