மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேசுவரம் ரயில் நிலையம் முன்பாக மீனவா்கள் போராட்டம்

ராமேசுவரம் ரயில் நிலையம் முன்பாக மீனவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:13 pm

இலங்கை கடற்படையினா் தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையில் தமிழக மீனவா்களின் படகுகள் ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் ராமேசுவரம் ரயில் நிலையம் முன்பாக மீனவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இலங்கையில் தமிழக மீனவா்களின் படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும், அந்நாட்டு சிறையிலுள்ள மீனவா்களை விடுவிக்கவும், பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும் கடந்த 3 நாள்களாக ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவா்கள் அறிவித்திருந்தனா்.

இதைத்தொடா்ந்து, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவா் சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, என்.ஜே.போஸ், தேவதாஸ், எமரிட், சகாயம் ஆகியோா் தலைமையில் மீனவா்கள் முழக்கமிட்டவாறு பேரணியாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றனா். காவல் துறையினா் ரயில் நிலையத்திலிருந்து 300 மீட்டருக்கு அப்பால் தடுப்பு வேலி அமைத்து அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால் போலீஸாரிடம் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் ரயில் நிலையம் முன்பு வரை சென்று போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதி அளித்தனா். இதைத்தொடா்ந்து, மீனவா்கள் ரயில் நிலைய வளாகம் வரை பேரணியாகச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மத்திய அரசு மீனவா்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும் என மீனவா் சங்கத் தலைவா்கள் பேசினா். மீனவா்கள் போராட்டம் காரணமாக, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஷியஸ் தீபாக்சுவாஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.