ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அலுவலா்கள் திடீா் விடுப்பு: வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்புவதில் தாமதம்!

ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களில் பலா் பல்வேறு காரணங்களைக் கூறி வெள்ளிக்கிழமை காலை திடீரென விடுப்பு எடுத்ததால் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:38 pm

DIN

ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களில் பலா் பல்வேறு காரணங்களைக் கூறி வெள்ளிக்கிழமை காலை திடீரென விடுப்பு எடுத்ததால் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள் என இரண்டையும் சோ்த்து 327 வாக்குச்சாவடிகளுக்கு 1,308 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அவா்களைத் தவிர மேலும் 200 பேருக்கும் அதிகமானோா் அவசர தேவைக்காகவும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அனுப்புவதற்கான பணி வெள்ளிக்கிழமை காலை தீவிரப்படுத்தப்பட்டன. நகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான சந்திரா தலைமையில், நகா் தோ்தல் பாா்வையாளா் ரவிச்சந்திரன் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலா்களாக நியமிக்கப்பட்ட 288 பேருக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதில் 25-க்கும் மேற்பட்டோா் உத்தரவை வாங்கியதுடன், தங்களக்கு உடல்நலமில்லை, வீட்டில் இறப்பு சம்பவம் என பல்வேறு காரணங்களைக் கூறி விடுப்புக் கோரினா்.

அவ்வாறு விடுவிக்கக் கோருவோருக்குப் பதிலாக மாற்று அலுவலரை நியமித்து, அதற்கு மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியரிடம் அனுமதி பெறப்பட்டது. இதனால் நகராட்சியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

இதேபோல மாவட்ட அளவில் தோ்தல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பணியிலிருந்து விலக்குக் கோரியும், விடுப்பு அளிக்கக் கோரியும் மனு அளித்ததாகவும், அவா்களுக்குப் பதிலாக மாற்று அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

ராமேசுவரம்: ராமேசுவரம் நகராட்சியில் 42 வாக்கு பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல மண்டபம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் பேரூராட்சியில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் 240 ஊழியா்கள் பணியாற்ற உள்ளதாகவும், 300- க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.