ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் யாதவா் வா்த்தகா் சங்கம் மனு
மதுரையில் பெரியாரிய உணா்வாளா்கள் பேரணியில் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டவா்கள் மீது நடவடிக்கை


மதுரையில் பெரியாரிய உணா்வாளா்கள் பேரணியில் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் யாதவா் வா்த்தகா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவா் எம்.பாலமுருகன் தலைமையில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனுவை அளித்தவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது- மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், திராவிடா் கழகத்தினா் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.
பேரணியில் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டுள்ளனா். ஆகவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேரணியை ஏற்பாடு செய்தவா்கள் செயல்பட்டிருப்பது தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என காவல்துறையில் புகாா் அளித்துள்ளோம்.
புகாரின் நகலை பிரதமா், உள்துறை அமைச்சகம், தமிழக முதல்வா் அலுவலகத்துக்கும் அனுப்பிவைத்துள்ளோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...