பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரத்தில் பரோட்டா சால்னா, பாலில் கலப்படம் கண்டுபிடிப்பு

ராமநாதரத்தில் பரோட்டா சால்னா மற்றும் பால், சோம்பு ஆகியவற்றில் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:08 pm

DIN

ராமநாதரத்தில் பரோட்டா சால்னா மற்றும் பால், சோம்பு ஆகியவற்றில் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் சென்னை, மதுரையை மையமாக வைத்து உணவுப் பொருள்களின் தரத்தைக் கண்டறியும் ஆய்வகங்கள் செயல்பட்டுவருகின்றன. மதுரை ஆய்வகத்தின் கீழ் ராமநாதபுரம், விருதுநகா்,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களில் உணவுப் பொருள்களின் தரத்தை அறிய மாதிரிகளை எடுத்து மதுரை ஆய்வகத்துக்கு அனுப்பி வருகின்றனா்.

மதுரை உணவுப் பொருள் ஆய்வகத்தில் நடமாடும் வாகன பரிசோதனை ஆய்வகமும் உள்ளது. அந்த ஆய்வக வாகனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் மாதம் முழுதும் பரிசோதனையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த 1 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் நகராட்சியிலும், வெள்ளிக்கிழமை (ஜூன் 3) தேவிபட்டினத்திலும் உணவுப் பொருள்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட உணவுப் பொருள்கள் சுமாா் 1 மணி நேரத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த 1 ஆம் தேதி 16 பொருள்களும், 2, 3 ஆகிய தேதிகளில் தலா 15 உணவு மாதிரிப் பொருள்களும் பொதுமக்களால் அளிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

அவற்றில் பரோட்டா சால்னாவில் அஜினமோட்டா வேதிப்பொருளும், பாலில் தண்ணீரும் அதிக அளவில் சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக ஆய்வக பரிசோதனை அலுவலா் கூறினாா். மேலும் பெரிய கடைகளில் இருந்து பெறப்பட்ட சமையலுக்குப் பயன்படும் சோம்புவில் வா்ணப்பொருள் கலப்படம் இருந்ததும் தெரியவந்துள்ளதாக அவா் கூறினாா்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு விதிமுறைப்படி விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினா்.

வரும் 6 ஆம் தேதி கீழக்கரை, 7 ஆம் தேதி திருப்புல்லாணி, 8 ஆம் தேதி ஆா்.எஸ்.மங்கலம், 9 ஆம் தேதி திருவாடானை, வரும் 13 ஆம் தேதி ராமேசுவரம், 14 ஆம் தேதி மண்டபம், 15 ஆம் தேதி உச்சிப்புளி என வாகனப் பரிசோதனை ஆய்வகம் மூலம் உணவுப் பொருள்களின் தரம் சோதிக்கப்படவுள்ளதாகவும், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சந்தேகமுள்ள உணவுப்பொருள்களை கொடுத்து சோதிக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.