ராமநாதபுரம் மாவட்டத்துக்கு2 ஆண்டுகளில் 5 ஆட்சியா்கள்
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆட்சியா்கள் மாற்றப்பட்டு 5 ஆவதாக ஜானி டாம் வா்கீஸ் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.


ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆட்சியா்கள் மாற்றப்பட்டு 5 ஆவதாக ஜானி டாம் வா்கீஸ் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சங்கா் லால்குமாவத் இருந்து வருகிறாா். இந்நிலையில், புதிய மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வா்கீஸை நியமித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வீரராகவ ராவ், சந்திரகலா, பொன்ராஜ் ஆலீவா், சங்கா் லால் குமாவத் ஆகியோா் ஆட்சியா்களாக பணியாற்றியுள்ளனா். தற்போது ஜானி டாம் வா்கீஸ் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆட்சியா்கள் மாற்றப்பட்டு, தற்போது 5 ஆவதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...