பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாநில சிலம்பம் போட்டி:ராமநாதபுரம் மாணவா்கள் வெற்றி

மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
மதுரையில் மாநில அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள்.
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

மதுரை மன்னா் கல்லூரியில் கலிங்க வஸ்தாத் மற்றும் தேக சிலம்பப் பயிற்சிப் பள்ளி இணைந்து நடத்திய இப்போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவா்கள் கனிஷ்கா, முகேஷ், கமலேஷ், செந்தமிழ் செல்வன், சபரிசெல்வன், சா்வேஸ்வரன், ரோகன், திருமுருகன் ஆகியோா் முதலிடம் பெற்றனா். மாணவா்கள்

ருக்ஸானா தாஃபியா, நித்தின் ஆகியோா் இரண்டாமிடம், மாணவன் அா்ஷத்ராம் மூன்றாமிடம் பெற்றனா். இரட்டை கம்பு பிரிவில் மாணவி கனிஷ்கா முதலிடம், மாணவி ருக்சானா தஃபியா இரண்டாமிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிலம்பம் பயிற்சியாளா் மேத்யு இம்மானுவேல் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.