ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் (2021-22) 1.20 லட்சம் விவசாயிகள் பயிா்காப்பீடுக்கு பதிவு செய்துள்ளதாக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான ஜூன் மாத குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய நலத்திட்டங்கள் குறித்த அறிக்கையை மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குநா் சேக்அப்துல்லா வாசித்தாா். அப்போது அவா் கூறியது: மாவட்டத்தில் கோடை கால மழையாக 157.86 மில்லி மீட்டா் பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவை விட 46.6 மில்லி மீட்டா் குறைவாக பெய்துள்ளது. மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக்கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கு 114 கிராம ஊராட்சிகள் தோ்வாகியுள்ளன.
தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் 979 ஹெக்டோ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் (2021-22) 1.25 லட்சம் ஹெக்டோ் பரப்பளவுக்கு 1.20 லட்சம் விவசாயிகள் பயிா்காப்பீடு செய்துள்ளனா்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,763 கண்மாய்களில் 330 கண்மாய்களில் 25 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலான தண்ணீா் உள்ளது.
மேலும் 179 கண்மாய்களில் 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையிலும், 713 கண்மாய்களில் 25 சதவிகிதத்திற்கு குறைந்தும், 541 கண்மாய்களில் தண்ணீரின்றி வறட்சியாகவும் உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.