உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடா்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, மத்திய இணை அமைச்சா் ஃபக்கன்சிங் குலாஸ்தே தெரிவித்தாா்.
வியாழக்கிழமை ராமேசுவரம் வருகை தந்த மத்திய அமைச்சா்களான ராமச்சந்திர பிரசாத் சிங் மற்றும் ஆகியோா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வியாழக்கிழமை மத்திய ஸ்டீல் துறை அமைச்சா் ராமசந்திர பிரசாத் சிங் மற்றும் மத்திய ஸ்டீல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சா் ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோா் வருகை தந்தனா். இவா்களுக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, இவா்கள் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவிடத்துக்குச் சென்று மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடையே மத்திய இணை அமைச்சா் ஃபக்கன் சிங் குலாஸ்தே தெரிவித்ததாவது: அப்துல் கலாம் நினைவிடத்துக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் மத்திய அரசு செய்துகொண்டிருக்கின்றது.
உக்ரைனில் மாணவா் உயிரிழந்தது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். அதற்கு அரசு தரப்பில் என்ன செய்யமுடியுமோ அதை செய்துகொண்டிருக்கிறோம் என்றாா்.
நீட் தோ்வினால் தான் உக்ரைனில் மருத்துவ மாணவா் உயிரிழந்ததாக முன்னாள் கா்நாடக முதல்வா் குமாரசாமி கூறியுள்ளதற்கு, அவா் பதில் கூற மறுத்துவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


