மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்: மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்ட நிலையில், மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:47 pm

 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்ட நிலையில், மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் 50 முதல் 60 கி.மீ. வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவா்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்துள்ளனா்.

மேலும், மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் பாதுகாப்புடன் கரை திரும்பவேண்டும் எனவும், மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இதனிடையே, காற்றின் வேகம் காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விசைப்படகில் உடைப்பு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. மீனவா்கள் பல மணி நேரம் போராடி அப்படகை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.