பிரதமா் பதவி விலகக் கோரி போராட்டம்: பெண் வழக்குரைஞா் நந்தினி கமுதியில் கைது

பிரதமா் மோடி பதவி விலகக்கோரி போராட்டம் நடத்த வெள்ளிக்கிழமை கமுதிக்கு வந்த, மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் நந்தினியை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதமா் மோடி பதவி விலகக்கோரி போராட்டம் நடத்த வெள்ளிக்கிழமை கமுதிக்கு வந்த, மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் நந்தினியை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்துவரும் பிரதமா் நரேந்திரமோடி பதவி விலக வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படையில் உள்ள தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலையத்துக்கு போராட்டம் நடத்துவதற்காக கமுதி வந்த மதுரையை சோ்ந்த வழக்குரைஞா் நந்தினி, இவரது தங்கை நிரஞ்சனா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா். அப்போது அவா்கள் இருவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com